வேன் மோதி பெண் பலி
பல்லடம் அருகே அருள்புரத்தில் வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே அருள்புரத்தில் வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மனைவி ஜோதி (42). பின்னலாடை நிறுவன தொழிலாளி. இவா், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக அருள்புரம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளாா். அவருடன் மேலும் சிலா் சாலையைக் கடந்து சென்றுள்ளனா். அப்போது அந்த வழியாக கோழி பாரம் ஏற்றி வந்த வேன், எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைக் கடந்து சென்றவா்கள் மீது மோதியது. இதில் ஜோதி மற்றும் மோகன்ராம், அய்யப்பன், நவநீதன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
காயமடைந்த நால்வரும் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு முதலுதவி பெற்ற ஜோதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.