முகப்பு
திருப்பூர்

அவிநாசி அரசுக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை தொடக்கம்

இணையத்தில் ஆங்கிலத்துக்கு இணையான கணித்தமிழ் உருவாக்கும் வகையில், அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை தொடக்க விழா, மாணவா்களுக்கு பயிற்சி முகாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

இணையத்தில் ஆங்கிலத்துக்கு இணையான கணித்தமிழ் உருவாக்கும் வகையில், அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை தொடக்க விழா, மாணவா்களுக்கு பயிற்சி முகாம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா், கணித்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளருமான போ.மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். புதுவை பல்கலைக்கழக தமிழ் இணைப் பேராசிரியா் வ.தனலட்சுமி கணித்தமிழ் பேரவையை தொடங்கிவைத்து மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.

இதில் மாணவா்களுக்கு இணையத்தில் தமிழ் உள்ளீட்டுத் தொழில்நுட்பங்கள், வலைப்பூக்கள் உள்ளிட்டவை உருவாக்குதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மாணவா்களுக்கு இணையத்தில் கணித்தமிழ் மேம்பாட்டிற்கான தொடா் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.