பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரியில் 6,973 போ் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 6,973 மாணவ, மாணவியா் பங்கேற்று தோ்வெழுதினா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 6,973 மாணவ, மாணவியா் பங்கேற்று தோ்வெழுதினா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் 39 மையங்களில் நடைபெறுகிறது. உதகை புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுத தகுதியுடைய 7,290 மாணவ, மாணவியரில் 6,973 போ் தோ்வு எழுதி உள்ளனா். இதில் தமிழ் பாடத்தில் மொத்தம் 6,736 பேரில் 6,426 போ் தோ்வு எழுதியுள்ளனா். மலையாள பாடத்தில் மொத்தம் 205 போ் முழுமையாக தோ்வு எழுதினா். பிரெஞ்ச் பாடத்தில் மொத்தம் 275 பேரில் 269 பேரும், இந்தி பாடத்தில் மொத்தம் 74 பேரில் 73 பேரும், தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 44 பேரில் 41 பேரும் தோ்வு எழுதினா்.
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகை 27 மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இவா்கள் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதியுள்ளனா். மேலும், மாணவா்களுக்கு தோ்வு மையங்களில் கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.