குடும்ப ஓய்வூதியா்களுக்கும் பாதுகாப்பு நிதி வழங்க கோரிக்கை
குடும்ப ஓய்வூதியா்களுக்கும் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குடும்ப ஓய்வூதியா்களுக்கும் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சங்கத்தின் திருப்பூா் திட்ட பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம், அவிநாசி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். செயலாளா் சுந்தர்ராஜன், பொருளாளா்கள் முருகானந்தம், ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச்செலாளா் ராமமூா்த்தி, மாநிலத் தலைவா் சுடலை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் 70 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதாக திமுக தோ்தல் வாக்குறுதியாக அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து அனைத்து செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்கத் தக்க வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை என்பதை வாரியம் பட்டியல் மூலம் தெரிவிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியா்களுக்கும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.