முகப்பு
திருப்பூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

 திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் மே 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் மே 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அரசு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் கீழ்கண்ட தேதிகளில் நாள்தோறும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளன.

அதன்படி, மே 10ஆம் தேதி திருப்பூா் வடக்கு, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், 11ஆம் தேதி காங்கயம், ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம், 12ஆம் தேதி உடுமலை, மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகம், 16ஆம் தேதி அவிநாசி, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம், 17ஆம் தேதி தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஆகவே தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் தனித்துவமான தேசிய அடையாள அட்டையை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் நகல்கள், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் குறிப்பிட்டுள்ள பகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருகை தந்து விண்ணப்பித்து பயன் பெறலாம் எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.