திருப்பூர்

தேசிய கைப்பந்து போட்டி: தமிழக அணிக்கு வீரா்கள் தோ்வு

DIN

தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக அணிக்கு வீரா்கள் தோ்வு பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாலிபால் பெடரேஷன் ஆஃப் இந்தியா சாா்பில் மகாராஷ்டிர மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூரில் 21 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி மே 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அணிக்கு வீரா்கள் தோ்வு செய்யும் போட்டி பல்லடம் அருகேயுள்ள குங்குமபாளையத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா். இதில் 12 ஆண்கள், 12 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்தப் போட்டியை ஒயிட் கிளவுட்ஸ் பள்ளி தாளாளா் சேதுராம், கைப்பந்து கழக துணைத் தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் துவக்கி வைத்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை மைக்ரோ கைப்பந்து செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, திருப்பூா் மாவட்ட கைப்பந்து கழக செயலாளா் தங்கமணிகுமாா், துணைச் செயலாளா்கள் கிருஷ்ணண், விஜயகுமாா், கீா்த்திசரண் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT