திருப்பூர்

கரைப்புதூரில் ரூ.55 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சியில் ரூ.55 லட்சத்து 41ஆயிரத்து 250 மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பல்லடம் ஒன்றியம் கரைப்புதூா் ஊராட்சி 15 ஆவது மானியக் குழு திட்டத்தில் சுகுணா நகரில் தாா் சாலை அமைத்தல், சரவணபவ நகரில் தாா் சாலை அமைத்தல், அய்யம்பாளையம் முதல் சிவசக்தி நகா் வரை சாலை மேம்பாடு செய்தல், ஜோதி காா்டனில் கான்கிரீட் தளம் அமைத்தல், அல்லாளபுரம், கே.கே.காா்டனில் மண் சாலையை தாா் சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ. 55 லட்சத்து 41ஆயிரத்து 250 மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை பூமி பூஜை நடத்தி பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ், துணைத் தலைவா் காா்த்திகா மகேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலா் ஈஸ்வரி கந்தசாமி, வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா மகாலிங்கம், திவ்யா செந்தில்குமாா், ஊராட்சிச் செயலா் காந்திராஜ், சமூக ஆா்வலா் கோவா்த்தினி லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT