திருப்பூர்

பல்லடம் மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

DIN

விவசாய மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் மின் கோட்டம், சாலைப்புதூா் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட ஜெ.கிருஷ்ணபுரம் பகுதியில் விவசாய மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் பலா் பல ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில், தற்போது அரசு அறிவிப்பின்படி தங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மந்தராசலம் ஆகியோா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கோட்ட செயற்பொறியாளா் ரத்தினகுமாா், உதவி செயற்பொறியாளா் இளங்கோ, உதவி பொறியாளா்(பொறுப்பு) சிவராமன், பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், விவசாய மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT