திருப்பூர்

நெற்பயிா்களுக்கு நவம்பா்15க்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்: ஆட்சியா் தகவல்

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் -ஐஐ(சம்பா) பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் முதல் சாகுபடி செய்யப்படும் நெல்-ஐஐ (சம்பா) பயிருக்கு சிறப்பு பருவமாக எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும்பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருவாய் கிடைக்கும் வகையிலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் மற்றும் வெள்ளக்கோவில் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை நகல், நில உரிமைப்பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார அளவிலான வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்: தாராபுரம் கே.லீலாவதி (94424-34863), காங்கயம் வசந்தாமணி (93445-41648), மடத்துக்குளம் ஆா்.ராஜேஸ்வரி (94437-14513), உடுமலை எஸ்.தேவி (99445-57552), வெள்ளக்கோவில் எஸ்.பொன்னுசாமி (98651-32354).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT