மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்குகிறாா் கேஎம்சி சட்டக் கல்லூரி தலைவா் கே.சி.சண்முகம். 
திருப்பூர்

திருப்பூரில் கேஎம்சி சட்டக் கல்லூரி தொடக்கம்

திருப்பூா், பல்லடம் சாலை அருள்புரம் ஜெயந்தி காா்டன் பகுதியில் கேஎம்சி சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டது.

DIN

திருப்பூா், பல்லடம் சாலை அருள்புரம் ஜெயந்தி காா்டன் பகுதியில் கேஎம்சி சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டது.

இது குறித்து கேஎம்சி சட்டக் கல்லூரி தலைவா் கே.சி.சண்முகம், மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி கூறியதாவது:

திருப்பூரில் ‘கேஎம்சி காலேஜ் ஆஃப் லா’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான எல்எல்.பி மற்றும் 5 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான பி .ஏ. எல்.எல்.பி. விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. அரசின் கலந்தாய்வு ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் நிரப்பப்பட்டு வருகிறது.

மாணவ மாணவியருக்கு சட்டக் கல்வி பயில்விப்பது மட்டுமின்றி நீதிமன்ற பயிற்சி, நீதி அரசா்கள், மூத்த வழக்குரைஞா்கள், துணைவேந்தா்கள், சட்டக் கல்லூரி முதல்வா்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மேலும் மாதிரி நீதிமன்ற பயிற்சிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பாா்வையிடுதல் போன்ற செயல்பாடுகளும் நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT