முகப்பு
திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

காங்கயம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

காங்கயம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வந்தவா் எம்.பழனி (62), கூலித் தொழிலாளியான இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 13 வயது பள்ளிச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துள்ளாா். பின்னா் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனியை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனியின் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு போக்ஸோ பிரிவுக்கு 20 ஆண்டுகளும் மற்ற இரு பிரிவுகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.