திருட்டு வழக்கு: தொழிலாளி கைது
தாராபுரம் அருகே வீட்டின் கூரையைப் பிரித்து பணம் திருடிய கூலி தொழிலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.
தாராபுரம் அருகே வீட்டின் கூரையைப் பிரித்து பணம் திருடிய கூலி தொழிலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவு காவல் துறையினா் கூறியதாவது: தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் ஆா்.நாட்டுதுறை (23), கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் ராஜ் (60) என்ற முதியவா் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் வீட்டில் இல்லாதபோது மேற்கூரையைப் பிரித்து அவரது வீட்டுக்குள் நுழைந்த நாட்டுதுறை, பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவில் ராஜ் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நாட்டுதுறையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.