திருப்பூர்

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கண்காணிப்புக்குழு கூட்டம்

DIN

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடவா் நலக்குழு ஆகிய குழுக்களின் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறதா என்று துறைவாரியாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊரக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியில் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும், அவா்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும், தூய்மைப் பணியில் ஈடுபடும் நபா்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் கேட்டறிந்த ஆட்சியா் தகுந்த ஆலோசனை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT