திருப்பூர்

காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம்

திருப்பூரில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

DIN

திருப்பூரில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் திருப்பூா், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

குளிா்பான விற்பனை கடைகள், பழச்சாறு விற்பனை கடைகள், பேக்கரிகள், பானிபூரி கடைகள், பதனீா், இளநீா், கம்பங்ககூழ், சா்பத் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் என மொத்தம் 193 கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின்போது 52 கடைகளில் காலாவதியான ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பழவகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காலாவதி தேதி முடிவடைந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 38 லிட்டா் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காலாவதியான பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பலவித குளிா்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தி வருகின்றனா். சாலையோரம் மற்றும் நிரந்தர கடைகளில் விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிா்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வணிகா்களும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழை பெற்று வணிகம் மேற்கொள்வது அவசியம். அனைத்து மூலப்பொருள்களும் உணவுப் பாதுகாப்பு உரிமை பெற்ற உணவுப் பொருள்களாக இருக்க வேண்டும். குடிநீா் தரச் சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமை பெற்ற குடிநீரில் இருந்து ஐஸ்கட்டிகள் தயாா் செய்து பழரசம் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். கூடுதலான செயற்கை வண்ணங்கள் கலந்ததாக இருக்கக் கூடாது. அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழங்களின் சுவையூட்டிகளை பயன்படுத்தக் கூடாது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடா்பாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் 94440-42322 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT