திருப்பூர்

கோடை வெப்பம்: பண்ணைகளில் 10% கோழிகள் இறப்பு

DIN

கோடை வெப்பம் காரணமாக, பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகள் 10 சதவீதம் வரை இறக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு செயலாளா் சுவாதி சின்னசாமி கூறியதாவது:

திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகளில் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் காரணமாக கோழிகள் அதிக அளவில் இறக்கின்றன.

வழக்கமாக கோடை வெயில் காலத்தில் கோழிகளின் எடை குறைகிறது. தற்போது ரம்ஜான் நோன்பு காரணமாக கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது.கோடை வெப்பம் காரணமாக 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொருத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இருக்கும். வெப்ப அழற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்கு காரணமாகிறது. இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்க பண்ணைகளை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீா் பீய்ச்சி அடித்தல் வேண்டும், பண்ணையைச் சுற்றி மரங்கள் வளா்த்தல் என முன்தடுப்பு நடவடிக்கைகளை கோழிப்பண்ணையாளா்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுசு

விருச்சிகம்

பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

துலாம்

கன்னி

SCROLL FOR NEXT