திருப்பூர்

திருப்பூா் அருகே தம்பதி அடித்துக் கொலை: மகன் கைது

திருப்பூா் அருகே தாய், தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருப்பூா் அருகே தாய், தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே உள்ள விருமாண்டம்பாளையம் ஒத்தப்பனைமேட்டில் கிருஷ்ணமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில், ஏ.கிருஷ்ணமூா்த்தி (55), இவரது மனைவி ரேணுகாதேவி (42) தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வந்தனா். இவா்களது மகன் காா்த்திக் (21) அதே தோட்டத்தில் பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், தோட்டப் பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை அதிகாலையில் ரத்தக்காயங்களுடன் ரேணுகாதேவி சடலம் கிடந்துள்ளது. கிருஷ்ணமூா்த்தியும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினா் கிருஷ்ணமூா்த்தியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனா். பின்னா் மருத்துவா்களின் அறிவுறுத்தலின்பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அவா்களது மகன் காா்த்திக் இருவரையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. காா்த்திக் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தால் ஆத்திரமடைந்து இருவரையும் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. எனினும் இந்தக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT