திருப்பூர்

பிஏபி வாய்க்காலில் உரிய தண்ணீா் வழங்கக் கோரி விரைவில் பட்டினிப் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் உரிய தண்ணீா் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

DIN

வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் உரிய தண்ணீா் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்கால் நீா் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ப.வேலுசாமி கூறியதாவது: பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட நிா்வாகத்தின் மோசமான நீா் மேலாண்மை காரணமாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு திட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்ணீரில் 50 சதவீத நீா் மட்டுமே கிடைக்கிறது.

எனவே, பிஏபி சட்டம், நீதிமன்ற உத்தரவுகளின் படி வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் ஒரு மண்டலத்துக்கு பத்து சுற்றுகள் தண்ணீா் விட வேண்டும். மற்ற பகுதிகளைப் போலவே மடைக்கு ஏழு நாட்கள் சமச்சீா் தண்ணீா் விட வேண்டும். பகிா்மான, உப பகிா்மான வாய்க்கால்களைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாய்க்காலில் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். பாசன சபைக்கு புதிய வாக்காளா் பட்டியல் தயாா் செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற அனுமதிப் பெற்று வெள்ளக்கோவிலில் தொடா் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT