திருப்பூர்

திருப்பூரில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

DIN

நீட் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் குமரன் நினைவகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்தப்போராட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 2 ஆவது மண்டலச் செயலாளருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசால் மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது பொதுத் தேர்வுக்கு முன்பாக இருந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்துள்ளார். ஆகவே ஆண்டு முழுவதும் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலக அளவில் பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து எம்பிபிஎஸ் படித்து விட்டு மருத்துவத்தின் மூலமாக பிரசித்தி பெற்றுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதில் எந்தவிதமான அரசியலும் கிடையாது. 
ஆகவே, நீட் தேர்வைக்கண்டித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்டத் தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். இதற்கு முன்பாக நீட் தேர்வு காணாமல்போகும் என்றார். இந்தப் பேராட்டத்தில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும், மேயருமான என்.தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT