FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருமுருகன்பூண்டி: அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்

திருமுருகன்பூண்டி அருகே விஜிவிஶ்ரீ கார்டன் பகுதியில் பேருந்து நிற்காதது,  அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 4 டிசம்பர் 2023, 10:41 am IST
திருப்பூர்- அவிநாசி சாலையில் பாதிப்புக்குள்ளான போக்குவரத்து.
பகிர்:

அவிநாசி: திருமுருகன்பூண்டி அருகே விஜிவிஶ்ரீ கார்டன் பகுதியில் பேருந்து நிற்காதது,  அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டி நகராட்சி உள்பட்ட பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு பிரதான பேருந்து நிறுத்தம் திருப்பூர்-அவிநாசி சாலையில் உள்ளது. இருப்பினும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதில்லை.

மேலும் சீரான குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக குடியிருப்பு நுழைவு வாயிலில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து  போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம்,  நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் இரு புறமும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையறிந்த  திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவிநாசி - திருப்பூர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments