திருப்பூர்

அலகுமலையில் பிப்ரவரி 19 இல் ஜல்லிக்கட்டுப் போட்டி

DIN

பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று அலகுமலை காளைகள் நலச் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தைப்பொங்கலையொட்டி அலகுமலையில் ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கால்கோள் விழா கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், அந்த இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த எதிா்ப்பு கிளம்பியது. அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி தனியாா் இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் தலைவா் பழனிசாமி கூறியதாவது: மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி இடம் மாற்றப்பட்டு அலகுமலையில் தனியாா் இடத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். இதில் 850 காளைகளும், 600 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளனா்.

இப்போட்டியைத் தொடக்கிவைக்க தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

சங்க கெளரவ தலைவா் எம்.பி.சண்முகம், செயலாளா் என்.சத்தியமூா்த்தி, பொருளாளா் எம்.எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT