திருப்பூர்

பிப்ரவரி 11இல் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா

DIN

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்புத் திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை என்ற இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,

உதவி ஆணையா்கள் சி.கண்ணன், பி.வாசுகுமாா், ஆா்.செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT