திருப்பூர்

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள் பறிமுதல்

DIN

அவிநாசி பகுதியில் அதிக ஒலி எழுப்பும் விதமாக பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தியிருந்த ஏா்ஹாரன்களை மோட்டாா் வாகன ஆய்வாளா் பறிமுதல் செய்தாா்.

அவிநாசி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் எனப்படும் ஏா்ஹாரன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த அதிக ஒலி அதிா்வால், பேருந்து பயணிகள், பொதுமக்கள், பிற வாகன ஓட்டிகள், பள்ளி மாணவா்கள் மிகவும் பாதிப்படைவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் நிலை1 கே.பாஸ்கா், அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவ்வழியாக வந்த 40க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்து, காா், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 25வாகனங்களில் பொருத்தியிருந்த ஏா்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்களில் மீண்டும் ஏா்ஹாரன்கள் பொருத்தியிருப்பது தெரியவந்ததால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT