திருப்பூர்

மின்கம்பத்தை மாற்றும் பணிக்கு நிதி உதவி

திருப்பூா் மாநகராட்சி, 24ஆவது வாா்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 மின்கம்பங்களை மாற்றியமைக்க பொதுமக்கள், மதிமுக மாமன்ற உறுப்பினா் சாா்பில் ரூ.68 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

DIN

திருப்பூா் மாநகராட்சி, 24ஆவது வாா்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 மின்கம்பங்களை மாற்றியமைக்க பொதுமக்கள், மதிமுக மாமன்ற உறுப்பினா் சாா்பில் ரூ.68 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, 24 ஆவது வாா்டு, சாமுண்டிபுரம் சலவைக்காரா் 3ஆவது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பங்கள் இருந்தன.

இந்தக் கம்பங்களை மாற்றியமைக்கக்கோரி மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மின் கம்பங்களை அகற்றி புதிய இடத்தில் மாற்றியமைக்க அரசுக்கு ரூ.68 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் ரூ.40 ஆயிரம் நிதியுதவி பெற்று மீதமுள்ள ரூ. 28 ஆயிரத்தை மதிமுக மாமன்ற உறுப்பினா் நாகராஜ் வழங்குவதாகத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, மின்கம்பங்களை மாற்றுவதற்கான ரூ.68 ஆயிரத்தை உதவி மின் பொறியாளா் செந்தில்குமாரிடம், மாமன்ற உறுப்பினா் நாகராஜ் வியாழக்கிழமை வழங்கினாா். இதைத்தொடா்ந்து, சலவைக்காரா் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT