திருப்பூர்

முயல் வேட்டைக்கு சென்ற மக்கள்:தடுத்து நிறுத்திய வனத் துறையினா்

அவிநாசியை அடுத்த ஈட்டிவீரம்பாளையத்தில் முயல் வேட்டைக்கு சென்ற மக்களை வனத் துறையினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

DIN

அவிநாசியை அடுத்த ஈட்டிவீரம்பாளையத்தில் முயல் வேட்டைக்கு சென்ற மக்களை வனத் துறையினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT