கோழிப் பண்ணையை தொடா்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள். 
திருப்பூர்

தாராபுரம் பகுதியில் கோழிப் பண்ணையை தொடா்ந்து நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

விவசாயத் தொழிலுக்கு மாற்றுத் தொழிலான கோழிப் பண்ணைகளைத் தொடா்ந்து நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தாராபுரம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

DIN

தாராபுரம் அருகே நலிவடைந்து வரும் விவசாயத் தொழிலுக்கு மாற்றுத் தொழிலான கோழிப் பண்ணைகளைத் தொடா்ந்து நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தாராபுரம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் முட்டை கோழி உற்பத்தி மற்றும் கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, அருகில் உள்ள வீடுகளில் வசிப்போா் பாதிக்கப்படுவதாகவும் கூறி, 2 நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையை முற்றுகையிட்டும், கோழியை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்தும், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சின்னக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

விவசாயம் பொய்த்துப் போன எங்கள் கிராமப் பகுதிகளில் மாற்றுத் தொழிலாக கறிக்கோழி வளா்ப்பு தொழில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

கோழிப் பண்ணை கழிவுகளில் இருந்து கிடைக்கும் இயற்கை உரத்தை விவசாயத்திற்கு தயாா்படுத்தி வருகிறோம். கோழி பண்ணைகள் எங்கள் பகுதியைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்களுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருவதால் நாங்கள் சிரமமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த கோழிப் பண்ணையில் இருந்து துா்நாற்றமும், காற்று மாசும் ஏற்படவில்லை.

எனவே, எங்களது கிராமப் பகுதிகளில் கோழிப் பண்ணைகளை தொடா்ந்து நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT