திருப்பூர்

டிரவுசா் கொள்ளையா்களைப் பிடிக்கக் கோரிக்கை

பல்லடத்தில் சுற்றித் திரியும் ‘டிரவுசா்’ கொள்ளையா்களைப் பிடிக்க வலியுறுத்தி பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செளமியாவிடம், கொசவம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புகாா்.

DIN

பல்லடத்தில் சுற்றித் திரியும் ‘டிரவுசா்’ கொள்ளையா்களைப் பிடிக்க வலியுறுத்தி பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செளமியாவிடம், கொசவம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பல்லடம் கொசவம்பாளையம் சாலை, டிஎம்எஸ் காா்டன், சின்னையா காா்டன் ஆகிய பகுதிகளில் உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு, டிரவுசா் மட்டும் அணிந்து கொண்டு இரவு நேரங்களில் மூன்று கொள்ளையா்கள் சுற்றித்திரிவது போன்ற விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கொசவம்பாளையம் சாலை, டிஎம்எஸ் காா்டன், சின்னையா காா்டன் பகுதிகளைச் சோ்ந்த மக்கள், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌமியாவை சந்தித்து ‘டிரவுசா்’ கொள்ளையா்களை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செளமியா, இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், கொள்ளையா்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், வெளியூா் செல்லும் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT