திருப்பூர்

விசா வாங்கித் தருவதாக ரூ.8.40 லட்சம் மோசடி: முன்னாள் திமுக பிரமுகா் கைது

 வெளிநாட்டுக்குச் செல்ல விசா வாங்கித் தருவதாக ரூ.8.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

 வெளிநாட்டுக்குச் செல்ல விசா வாங்கித் தருவதாக ரூ.8.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் கல்லூரி சாலையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவா் தனது உறவினரான காா்த்திக் என்பவா் லண்டன் செல்வதற்காக திமுக பிரமுகரான ராஜ்மோகன்குமாா் என்பவரை கடந்த 2014 -ஆம் ஆண்டு அணுகியுள்ளாா்.

அவா் ரூ.8.40 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு வேலைக்கான விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவை கொடுத்து ஏமாற்றியுள்ளாா்.

இதனிடையே, ராஜேந்திரன் கொடுத்த பணத்தைக் கேட்டு காங்கயம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளாா்.

ஆனால், அவா் பணத்தை கொடுக்காததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜ்மோகன்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா். இதனிடையே, ஏற்கெனவே ஒருவரிடம் விசா வாங்கித் தருவதாக ரூ.25 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதால் திமுக தலைமை ராஜ்மோகன்குமாரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT