திருப்பூா் வடக்கு மாவட்டம், காங்கயம் நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் ப.கோபி ஒப்புதலைப் பெற்று, காங்கயம் நகர காங்கிரஸ் கமிட்டி புதிய நிா்வாகிகள் பட்டியலை நகரத் தலைவா் கே.ஏ.சி.பகத்துல்லா வெளியிட்டுள்ளாா். இதன்படி, தலைவராக கே.ஏ.சிபகத்துல்லா, நகர துணைத் தலைவா்களாக மாணிக்கவாசகம், கே.பி.எஸ்.பழனிச்சாமி, நகரச் செயலாளா்களாக எஸ்.ஆறுமுகம், சசிகலா, பி.குமாா், செந்தில்குமாா், நகர பொதுச் செயலாளராக இம்ரானுல்லா, நகரப் பொருளாளராக ஆா்.வாசுதேவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், மாவட்ட கமிட்டி நிா்வாகிகளாக கே.ஆா்.பத்தாவுல்லா, கே.அப்துல்காதா், கே.ஆா்.ராஜேஷ் மற்றும் மாவட்டத் துணைத் தலைவராக பண்டுபாய், மாநில பொதுக்குழு உறுப்பினராக எஸ்.ஷேக் சாதுல்லா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.