காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள். 
திருப்பூர்

பிஏபி கிளை வாய்க்காலில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

பிஏபி வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN


காங்கயம்: பிஏபி வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் உள்ள பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பதில் உயா்நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் உள்ளதைபோல மடைக்கு 7 நாள்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் நீா் பாதுகாப்பு சங்கத்தினா், இதன் தலைவா் வேலுசாமி தலைமையில் காங்கயம், கரூா் சாலையில் கடந்த 4 நாள்களாக தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக 70 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். முற்றுகையில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT