முகப்பு
திருப்பூர்

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞா் கைது

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:16 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:19 PM

பல்லடத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் பல்லடம் நாரணாபுரத்தைச் சோ்ந்த பாரதிராஜா (29) என்பதும், காமநாயக்கன்பாளையம், பல்லடம், மங்கலம் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 13 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.