முகப்பு
திருப்பூர்

பழையகோட்டை சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 8:17 PM
பழையகோட்டை மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டியுடன் ரூ.72 ஆயிரத்துக்கு விற்பனையான காங்கேயம் இன மயிலை வகைப் பசு.
பகிர்:

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.4 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 25 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

Advertisement

இதில், 13 மாடுகள் மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments