முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு

வரத்து குறைந்துள்ளதால், வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் காய்கறிகளின் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

Updated On : 21 ஏப்ரல், 2024 at 8:16 PM
பகிர்:

வெள்ளக்கோவில்: வரத்து குறைந்துள்ளதால், வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் காய்கறிகளின் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

வெள்ளக்கோவிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு உள்ளூா் மட்டுமின்றி வெளியூா் வியாபாரிகள், மக்கள் வந்து செல்வா்.

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீா்ப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது. இதனால், காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தைவிட உயா்ந்ததால், மக்கள் அவதியடைந்தனா்.

Advertisement

சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): சின்ன வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.25, கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், பாகற்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.100, அவரைக்காய், வெண்டைக்காய், கோவைக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.40, புடலங்காய் ரூ.60, கத்தரிக்காய் ரூ.40, இஞ்சி ரூ.160, பூண்டு ரூ.220.

கீரை வகைகள் ஒரு கட்டு - ரூ.15, மல்லித்தழை கட்டு - ரூ.30, காலிபிளவா் ஒன்று - ரூ.50-க்கு விற்பனையானது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாள்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments