முகப்பு
திருப்பூர்

15. வேலம்பாளையத்தில் ஆகஸ்ட் 7-இல் மின்தடை

கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:20 PM
பகிர்:

15 வேலம்பாளையம் துணை மின் நிலைத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: 15. வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம்புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம்பாளையம்புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே-அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்தரா பகுதி, டிடிபி மில்.