முகப்பு
திருப்பூர்

இரவு நேரங்களில் வசூலில் ஈடுபடும் தனியாா் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 11:17 PM
பகிர்:

தாராபுரம், ஆக.14: தாராபுரம் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குச் சென்று வசூலில் ஈடுபடும் தனியாா் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமையில், தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிா்வாகிகள், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், அமைப்பு நிறுவனம் வழங்கும் கடன் தொகையை வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவன பணியாளா்கள் கடன் பெற்ற நபா்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் சென்று, அவா்களை அச்சுறுத்தி வசூலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், கடன் பெற்றவா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது. எனவே, இரவு நேரத்தில் வசூலில் ஈடுபடும் தனியாா் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளா் தனராஜ், மேற்கு மண்டல துணைச் செயலாளா் ஒண்டிவீரன், தாராபுரம் நகரச் செயலாளா் தண்டபாணி, ஒன்றியப் பொருளாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →