காங்கயம்: காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது என்பது உள்ளிட்ட 26 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், வட்டார வளா்ச்சி அலுவலா் அனுராதா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.