வெள்ளக்கோவில் பகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் ஆய்வு
வெள்ளக்கோவில் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
திருப்பூா் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம், உப்புப்பாளையம் சாலை கழிவு நீா் கால்வாய் பணி, வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகள், நகராட்சி குப்பை அரைக்கும் இடம், உரக்கிடங்கு, காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்தூா் சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
அப்போது வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.