முகப்பு
திருப்பூர்

பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:58 PM
பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலசத்துக்கு ஊற்றப்படும் புனிதநீா்.
பகிர்:

பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி மூத்த பிள்ளையாா் வழிபாடு, யாக வேள்விகள் நடைபெற்றன. கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இவ்விழாவில் திருப்பூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலா் ஆடிட்டா் முத்துராமன், பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மோகனசுந்தரராஜ், அறங்காவலா்கள் சீதாலட்சுமி தங்கவேல், சின்னக்கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அவிநாசி திருப்புக்கொளியூா் வாகீசா் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினாா். பொங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபராதனை நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.