அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா். 
திருப்பூர்

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது...

Din

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் பயன்பாட்டில் இல்லாத 1,055 திறந்தவெளி கிணறுகள், 1,155 ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீா் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

காங்கயம், குண்டடம், மூலனூா், பல்லடம், அவிநாசி ஒன்றியங்களுக்குள்பட்ட படியூா், எல்லப்பாளையம்புதூா், கிளாங்குண்டல், மல்லேகவுண்டன்பாளையம், பணிக்கம்பட்டி, துலுக்கமுத்தூா் ஊராட்களில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டஇயக்குநா் கோ.மலா்விழி, கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசீலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செல்வி, ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, செயற்பொறியளாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT