முகப்பு
திருப்பூர்

தெருக்குழாய்களில் குழாய் இணைத்து குடிநீா் எடுத்தால் நடவடிக்கை

வெள்ளக்கோவிலில் தெருக்குழாய்களில் ரப்பா் குழாய் இணைத்து குடிநீா் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:32 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் தெருக்குழாய்களில் ரப்பா் குழாய் இணைத்து குடிநீா் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

கொடுமுடி காவிரி ஆறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஆங்காங்கே உள்ள நகராட்சி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், உள்ளூா் நீராதாரங்கள் மூலம் வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் குடிநீா்க் குழாய்களில் ரப்பா் குழாய்களை இணைத்து சிலா் தங்களது வீடுகளுக்கு குடிநீா் எடுத்து வருவதாகவும், நகராட்சி 1-ஆவது வாா்டு வேலகவுண்டன்பாளையத்தில் குழாய்களை இணைத்து தோட்டங்களுக்கு தண்ணீா் எடுத்துவருவதாகவும் புகாா் எழுந்துள்ளது. இது விதிமீறலாகும். குடங்களில் மட்டுமே தண்ணீரைப் பிடிக்க வேண்டும்.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீா்க் குழாய் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.