தளி பேருராட்சி துணைத் தலைவா் மீது தாக்குதல்
உடுமலை அருகே தளி பேரூராட்சியின் துணைத் தலைவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உடுமலை அருகே தளி பேரூராட்சியின் துணைத் தலைவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தளி பேரூராட்சியில் மயான மேம்பாட்டு பணிக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஒப்பந்ததாரா் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயானம் கட்டும் பகுதி பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது எனக் கூறி மேம்பாட்டு பணிக்கு அந்தப் பகுதியை சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தளி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி துணைத் தலைவா் செல்வன் வியாழக்கிழமை இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த கருணாகரன் என்பவா் மயானம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
மேலும், துணைத் தலைவரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தளி காவல் நிலையத்தில் துணைத் தலைவா் செல்வம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.