முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் சுகாதார நிலைய ஆய்வக கட்டடம் திறப்பு

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் பொது சுகாதார அலகு ஆய்வக கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:13 PM
சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் கனியரசிமுத்துக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் பொது சுகாதார அலகு ஆய்வக கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த ஆய்வக கட்டடத்தை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

வெள்ளக்கோவில் சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கனியரசிமுத்துக்குமாா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினாா். வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.