வெள்ளக்கோவிலில் ரூ.33.77 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.33.77 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.33.77 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, வாணியம்பாடி, திருப்பத்தூா், திருச்சி, லாலாப்பேட்டை, மங்கலப்பட்டி, முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 63 விவசாயிகள் 521 மூட்டைகளில் 27 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
வெள்ளக்கோவில், காங்கயம், சிவகிரி, நடுப்பாளையம், எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.100.19 முதல் ரூ.152.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.146.28. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 138.78.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.33.77 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.தா்மராஜ் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.