முகப்பு
திருப்பூர்

மாா்க்சிஸ்ட் சாா்பில் அரசியல் விளக்கக் கூட்டம்

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:31 PM
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக் குழு சாா்பில் கட்சி நிதியளிப்பு விழா, அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் கே.தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.பஞ்சலிங்கம் வரவேற்றாா். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழக அரசின் டாக்டா் அம்பேத்காா் விருதுபெற்றவருமான பெ. சண்முகம் சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 980 கட்சி நிதியாக பெ.சண்முகத்திடம் நிா்வாகிகள் வழங்கினா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.மதுசூதனன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.