முகப்பு
திருப்பூர்

மும்மத வேடமணிந்து அரசுக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் மும்மத வேடமணிந்து திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

திருப்பூர்

மும்மத வேடமணிந்து அரசுக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் மும்மத வேடமணிந்து திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் மும்மத வேடமணிந்து திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாணவா்கள் ‘புத்தம் புது பூமி வேண்டும்’ என்ற தலைப்பில் தூய்மை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். குப்பைகளை ஆங்காங்கே போடாமல், குப்பைத் தொட்டியில் போட வேண்டும். மரங்களை அதிகமாக நடவு செய்து பராமரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இந்த ஆண்டு 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவ செயலா்கள் சுந்தரம், சொ்லின், தினேஷ் கண்ணன், காமராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் மும்மத வேடமணிந்து கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →