மையத் தடுப்பில் மோதி நிற்கும் லாரி. 
திருப்பூர்

சாலையின் மையத் தடுப்பில் மோதி லாரி சேதம்

Din

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி லாரி சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவா்சோலை புலம்பட்டியைச் சோ்ந்தவா் மொய்தீன்குட்டி (38), லாரி ஓட்டுநா். இவா், சக ஓட்டுநருடன் உர மூட்டைகளை ஏற்றுவதற்காக கேரளத்தில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியை ஓட்டிச்சென்றுள்ளாா்.

அப்போது, முத்தூா் - காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில் லாரியின் முன்பக்க டயா்கள் வெடித்துச் சேதமடைந்தன. ஓட்டுநா்கள் இருவரும் உயிா் தப்பினா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT