முகப்பு
திருப்பூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:00 PM
பகிர்:

பல்லடம், ஜூலை 19: பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள அலகுமலை ஊராட்சி கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (32)., இவா் கொடுவாயில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், அழகு நிலையத்தை பூட்டிவிட்டு வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

திருப்பூா் - தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், தமிழ்ச்செல்வியின் தங்கச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனா்.

சுதாரித்துக் கொண்ட அவா் சங்கிலியைப் பிடித்துள்ளாா். இதில், பாதியளவு சங்கிலி சுமாா் ஒன்றரை பவுன் மா்ம நபா்களிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →