முகப்பு
திருப்பூர்

மழை வெள்ள தற்காப்பு ஒத்திகை

வெள்ளம் ஏற்படும்போது தற்காத்து கொள்வது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

Updated On : 19 ஜூலை, 2024 at 5:57 PM
வெள்ள பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

வெள்ளக்கோவில், ஜூலை 19: வெள்ளக்கோவில் அருகேயுள்ள உத்தமபாளையத்தில் மழை வெள்ளம் ஏற்படும்போது தற்காத்து கொள்வது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் வே.பிரபாகரன் தலைமை வகித்தாா்.

இதில், மழை காலங்களில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.

இதில், பள்ளி தலைமை ஆசிரியா் நல்லசிவம், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →