முகப்பு
திருப்பூர்

திருப்பூா் தலைமை அஞ்சல் நிலையத்தில் மாா்ச் 21 இல் மக்கள் குறைதீா் கூட்டம்

Updated On : 10 மார்ச், 2024 at 12:07 AM
பகிர்:

திருப்பூா் தலைமை அஞ்சல் நிலையத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் ரயில் நிலையம் அருகேயுள்ள உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களின் சேவைகள் குறித்து விவாதிக்க மாா்ச் 21- ஆம் தேதி மாலை 4 மணியளவில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகாா்கள், ஆலோசனைகளை விஜயதனசேகா், திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திருப்பூா்-641601 என்ற முகவரிக்கு மாா்ச் 15- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். கடிதத்தின்மேல் என்று தவறாமல் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.