முகப்பு
திருப்பூர்

காங்கயம், வெள்ளக்கோவிலில் ரூ.2.88 லட்சம் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2024 at 10:42 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தோ்தல் அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:01 PM

காங்கயம், வெள்ளக்கோவில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். காங்கயம் வேளாண்மை துணை அலுவலா் ரமேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சிவன்மலை அருகே வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், காங்கயத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. முத்தூா் சாலை பகுதியில் தோ்தல் அலுவலா் சங்கீதா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில், மதுரை, அலங்காநல்லூரைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 பறிமுல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2.88 லட்சம் சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.