திருப்பூர்

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

Din

கோவை, அவிநாசி, பல்லடம் கிளைச் சிறைகளில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நிகழ்வில் சமரச தீா்வு காணப்பட்டு 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் சிறைவாசிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நிகழ்வு கோவை மத்திய சிறை, அவிநாசி, பல்லடம் கிளைச் சிறைகளில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 3 அமா்வுகள் நடைபெற்ற நிலையில், 28 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 5 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு 5 போ் விடுதலை செய்யப்பட்டனா். இதில், நீதித் துறை நடுவா்கள் முருகேசன், வடிவேல், சித்ரா ஆகியோா் வழக்குகளை விசாரித்து சமரச தீா்வு கண்டனா்.

பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

SCROLL FOR NEXT